
அன்னமே சீயோன் கண்ணே – Annamae zion kannae lyrics

அன்னமே சீயோன் கண்ணே – Annamae zion kannae lyrics
1. அன்னமே சீயோன் கண்ணே அன்பரதோ போறாரடி
மன்னவனார் நமக்காகத் தம்மை பலியிடப் போறார்.
2. இன்னும் என்ன செய்யப் போறார் கன்னியரே சோரிசிந்த
என்னருமை ஏசுபரன் சின்னப்படப் போறாரடி.
3. பன்னிரு சீடர்களில் பண ஆசைகொண்ட யூதாஸ்
மன்னர் புகழ் தேசிகரை காட்டிக் கொடுக்கத் துணிந்தான்.
4. ஆகடிய யூதர் கூடி அண்ணல் திருக்கரத்தைக் கட்டி
தேகம் நொந்து துடிக்க ஓங்கி ஓங்கி அடித்தார்.
5. பித்தனென்று வெள்ளை அரைச்சட்டை ஒன்று தானுடுத்தி
பேதக ஏரோதே அவன் பேசிப் பரிகாசம் செய்தான்.
6. குப்புற விழுந்தே துயர் அற்புதனடைந்தாரடி
எப்பொருளான திரியேக வஸ்து நமக்காக
7. கொல்கதா மலைதனிலே குருசதிலேதான் மரிக்க
கோதில்லா நீதிபரன் போறார் அதோ பார் சகியே
8. பாரச் சிலுவை சுமந்து பாதகரோடே நடந்து
போற துயரறியப் பொங்கி மிக மனம் நொறுங்கி
9. வாசகன் ஏசு திருபாடுகளைத் தானுணர்ந்து
நேசமதாய்த் தாசர்களும் சாற்றித்துதி பாடிடவே