1. அன்பு மிகும் இரட்சகனே
இன்பமுடன் சேர்த்தீ ரென்னை;
உன்னதா வுந்தன் முன் எந்தன்
மேன்மை யாது மில்லையே!
2. காருமெனை ஆபத்தினில்
பாரும் பாதை தனில் விழாமல்
தாரும் உந்தன் கிருபை மிக
பாரம் மிகும் சோதனையில்
3. கை விடமாட்டேனென்று
மெய்யாகவே வாக்களித்தீர்!
ஐயா நீர் என்னருகிருக்க
நேயா துன்பம் இன்பமாமே