
கடந்து வந்த பாதைகளை – Kadanthu vantha paathaikalai song lyrics
Deal Score0

கடந்து வந்த பாதைகளை – Kadanthu vantha paathaikalai song lyrics
கடந்து வந்த பாதைகளை
நினைத்து நன்றி சொல்கிறேன்
உயர்த்தி வைத்த இயேசுவையே
எந்த நாளும் நானும் பாடுகிறேன்
1.உளையான சேற்றினின்று என்னை தூக்கி எடுத்தீரே
கால்கள் இடறாமல் கன்மலைமேல்
நிறுத்தினீரே
2.அனலாக ஜீவித்திட அபிஷேகம்
ஈந்தீரே
பெலத்தின்மேல் பெலனடைய உம்
ஆவியால் நிரப்பினீரே
3.எதிர் காலம் உம் கரத்தில்
எதற்கும் பயமில்லையே
எந்தன் நேசர் இயேசு நீரே
துணையாக வருவீரே