
கர்த்தாவே உமது கூடாரத்தில் – Karthave Umathu Koodarathil
Deal Score0

கர்த்தாவே உமது கூடாரத்தில் – Karthave Umathu Koodarathil
கர்த்தாவே உமது கூடாரத்தில்
தங்கி வாழ்பவன் யார்
குடியிருப்பவன் யார் (2)
1. உத்தமனாய் தினம் நடந்து
நீதியிலே நிலை நிற்பவன்
மனதார சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே
2. நாவினால் புறங்கூறாமல்
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே
3. கர்த்தருக்குப் பயந்தவரை
காலமெல்லாம் கனம் செய்பவன்
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே
4. கைகள் தூய்மை உள்ளவன்
இதய நேர்மை உள்ளவன்
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே