Skip to content

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal song lyrics

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal song lyrics

1.கோர குருசின் பாடுகள் எனக்காக
கோரமான பாவியாம் எனக்காக
காயங்கள் ஏற்றீரே எனக்காக
கடைசி சொட்டு ரத்தமும் எனக்காக

இந்த மா நேசத்தை உதறியே தள்ளினேன் நாதரே
இணைத்தீரே உம்முடன் உம்மை போல் என்னையும் மாற்றவே

2.பாவியான என்னையும் மீட்கவே
பாரமான சிலுவையை சுமந்தீரே
பாசத்தால் பட்சமாய் அணைத்தீரே
பாதகன் என்னையும் மீட்டீரே

3.உலகத்தின் போக்கிலே ஜீவித்தேன்
உன்னதர் அன்பினை தள்ளினேன்
உருக்கமாய் இறங்கியே மீட்டீரே
உன்னதா உம்மை போல் யாருண்டு