
சகோதரர் ஒருமித்து வாசம் – Sakotharar oru mithu vaasam

சகோதரர் ஒருமித்து வாசம் – Sakotharar oru mithu vaasam
சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது
எத்தனை எத்தனை இன்பமாக இருக்கும்
1. அது ஆரோனின் சிரசின் மேல் ஊற்றப்பட்டதாயும்
அங்கிருந்து இறங்கிடும் தைலமாயிருக்கும் (2)
கர்த்தர் அங்கே வாசம் செய்வார்
ஆசீர்வாதம் தந்திடுவார் (2)
2. அது சமாதானம் சந்தோஷம் நிறைவுள்ள சம்பத்தாகும்
கிறிஸ்துவில் நிலைத்திடும் புதிய வாழ்வைத் தரும் (2)
கர்த்தர் அங்கே வாசம் செய்வார்
ஆசீர்வாதம் தந்திடுவார் (2)
3. அது பரலோக இன்பத்தை இங்கே கொண்டுவரும்
தேவனின் சாயலை பெற்றிட உதவி செய்யும் (2)
கர்த்தர் அங்கே வாசம் செய்வார் ஆசீர்வாதம் தந்திடுவார் (2)