
தூதர் தொனி கேட்கும் – Thothar thoni keatkum antha naal song lyrics

தூதர் தொனி கேட்கும் – Thothar thoni keatkum antha naal song lyrics
தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப நாள்
தூயர் சேர்ந்து வானில் தோன்றிடும் அந்நாள்
நேசர் இங்கே வானில் வந்திடும் நந்நாள்
பரம சீயோன் நாடு நேராகச் செல்லுவோம்
செல்லுவோம் வெல்லுவோம்
பரம சீயோன் நாட்டின் நேராய் செல்லுவோம்
போற்றுவோம் புகழ்வோம்
அன்பர் இயேசு நாமம் நாமும் போற்றுவோம்
1. பாவம் சாபம் யாவும் நீக்கிப் போக்கும் நாள்
பாடும் சாவும் இல்லா நாட்டின் சேரும்
மீட்பர் வாழ்க்கை நம்பி வாழ்ந்தோர் கூடும் நாள்
பரம சீயோன் நாடு நேராய்ச் செல்லுவோம்
2. பூவில் பூவோர் வேலை ஓய்ந்திடும் அந்நாள்
பாரில் நேசர் இயேசு வந்திடும் அந்நாள்
மீட்கப்பட்டோர் கூடிப் பாடிடும் அந்நாள்
பரம சீயோன் நாடு நேராய் செல்லுவோம்
3. நீதன் இயேசு நியாயம் தீர்த்திடும் அந்நாள்
சுதன் சுத்தரைப் பிரித்திடும் அந்நாள்
நேசர் வலப்பக்கம் போய்ச் சேரும் அந்நாள்
பரம சீயோன் நாடு நேராய்ச் செல்லுவோம்
4. அன்பர் மீட்பைப் பெற்றோர் கூடிப் பாடும் நாள்
அண்ணல் இயேசுவைக் கண்டு களிக்கும் நாள்
அல்லேலூயா பாட்டின் ஓசை கேட்கும் நாள்
பரம சீயோன் நாடு நேராய்ச் செல்லுவோம்