
தோத்திரம் கோடா கோடி துங்கவனே – Thothiram Koda Kodi song lyrics

தோத்திரம் கோடா கோடி துங்கவனே – Thothiram Koda Kodi song lyrics
1. தோத்திரம் கோடா கோடி துங்கவனே உமக்கு
தோத்திரம் கோடி தோத்திரமே
2. நன்னயமாக நாங்கள் இன்றுமோர் நாளைக் கண்டோம்
உன்னதனே உன் கிருபை
3. எத்தனையோ கிருவை நித்தம் நித்தம் புதிதாய்
உததமமாய்க் கடாட்சித்தீர்
4. பாவத்திற்கேற்றபடி பலனை மேல் சுத்தாமல்
மேவித் தாய் தந்தை போல் காத்தீர்
5. இம்மானுவேலரசே இம்மட்டெம்மைக் காத்தவரே
இனிமேலும் காப்பவர் நீரே
6. பலவீனர் சுகவீனரைப் பட்சமாயக் காருமையா
பெலன் சுகம் ஜீவன் உம்மாலே
7. இன்றைக்குத் தேவையான யாவையும் தாருமையா
இந்நிமிஷமே அனுப்புமே
8. வாழ்க கிறிஸ்து சபை வாழ்க பரிசுத்தாவியும்
வாழ்க பிதா, குமாரனும்