
பொன்னும் பொருளும் இல்லை | Ponnum Proulum Illai | Tamil Christian song | DB Media Music

பொன்னும் பொருளும் இல்லை | Ponnum Proulum Illai | Tamil Christian song | DB Media Music
#PonnumPorulimIllai #TamilChristianSong #DBMediaMusic
பொன்னும் பொருளுமில்லை
என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2)
சொந்தம் பந்தமுமெல்லாம்
நீயே எனச் சொல்லி வந்தேன்
எந்தையும் என் தாயும் நீயன்றோ
நீயே என்னையாளும் மன்னவனன்றோ
நிலையில்லா உலகினில்
நிலைத்து நான் வாழ
என் நிம்மதி இழந்து நின்றேன்
வளமில்லா வாழ்வினில்
வசந்தங்கள் தேடி நான்
அளவில்லா பாவம் செய்தேன்
தனது இன்னுயிரை பலியெனத் தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன்
இன்று உனக்கு நான் எனையளித்தேன்
வறுமையும் ஏழ்மையும்
பசியும் பிணியும்
ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும்
அன்பும் அறமும்
நிலைத்திட பணி செய்வேன்
உன்னத தேவனே உமதருட்கருவியாய்
உலகினில் வாழ்ந்திடுவேன்
என்றும் உன்னிலே வாழ்ந்திடுவேன்