Skip to content

அக்கினி அக்கினி எழுப்புதல்-Agni Agni Elupudhal

அக்கினி அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி (2)
அக்கினி அபிஷேகம் – தேவா
இப்போ ஊற்றிடுமே (2)
1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த அக்கினி
இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே
2. மேல்வீட்டறையிலே நிரப்பிய பரலோக அக்கினி
இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே
3. உன்னத பெலத்தினாலே எம்மை இடைக்கட்டும் அக்கினி
எங்கள் தேசத்திலே பற்றிப் பிடித்து பரவட்டுமே