Skip to content

அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya baalan arul nirai

அதிசய பாலன் அருள் நிறை தேவன்
அன்பால் என்னை தேடி வந்தாரே
காணாத ஆட்டை தேடி நல்ல மேய்ப்பன்
கனிவோடு பாரில் வந்தாரே (2)
1. வானத்தில் தூதர் வட்டமிட்டே
வான் பரனவர் பிறப்பினை பாட
மாடடை குடில் திசை நோக்கியே
மந்தை ஆயரும் விரைந்தோடினர்
2. வானில் ஓர் விண்மீன் முன்னே செல்ல
மன்னர் மூவரும் தொடர்ந்தே பின்செல்ல
முன்னணையினில் மன்னன் ஏசுவை
கண்டு மகிழ்ந்து பணிந்தனரே