அழிந்து போகின்ற ஆத்துமாக்களை – Azhinthu Poginra Aatumakkalai

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் திமமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்
தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே
1. இருளின் ஜாதிகள்
பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல்
வெளிச்சம் உதிக்கட்டும்
2. திறப்பின் வாசலில்
தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான்
தினமும் ஜெபிக்கின்றேன்
3. எக்காள சப்தம் நான்
மௌனம் எனக்கில்லை
சாமக்காவலன்
சத்தியம் பேசுவேன்
4. கண்ணீர் சிந்தியே
விதைகள் தூவினேன்
கெம்பீர சப்தமாய்
அறுவடை செய்கிறேன்
5. ஊதாரி மைந்தர்கள்
உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும்
விருந்து நடக்கட்டும்

Scroll to Top