இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க – Yesu Piranthar Paatu Paadunga | Tamil Christmas Song 2022
Yesu Piranthar Paatu Pandunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க
Lyrics:
இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க
நம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்க (2)
ஆனந்த இராகங்கள் பாடிடுங்கள்
ஆர்ப்பரித்து பாலகனை கொண்டாடுங்கள் (2)
1. ஏசாயா திருவாக்கும் நிறைவேறவே
ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே (2)
ஏழையாக அவதரித்தார்
தாழ்மையாக வந்துதித்தார் (2)
பாரெங்கும் சந்தோஷம் பெருகிடவே – (இந்த) (2)
-இயேசு பிறந்தார்
2. ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்க
ஏகமாய் பூமியின் பாவம் தீர்க்க (2)
பாலகனாய் வானவரே
பாரினிலே அவதரித்தார் (2)
பாரெங்கும் சமாதானம் நிலைத்திடவே – (இந்த) (2)
-இயேசு பிறந்தார்
3. தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரே
பிறந்திட்டோம் எம்முள்ளம் அரசாளுமே (2)
பாவங்களை மன்னித்திடும்
பாசமுடன் ஏற்றுக்கொள்ளும் (2)
என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே – (தேவா) (2)
-இயேசு பிறந்தார்