
இறைவனை நம்பியிருக்கிறேன் – Iraivanai Nambi Irukirean

இறைவனை (இயேசுவை) நம்பியிருக்கிறேன்
எதற்கும் பயப்படேன்
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
1. பயம் என்னை ஆட்கொண்டால்
பாடுவேன் அதிகமாய்
திருவசனம் தியானம் செய்து
ஜெயமெடுப்பேன் நிச்சயமாய்
அச்சம் மேற்கொள்ளாது
இறை அமைதி என்னை காக்கும்
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
2. என் சார்பில் இருக்கின்றீர்
என்பதை நான் அறிந்து கொண்டேன்
எதிராக செயல்படுவோர்
திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம்
3. சாவினின்று என் உயிரை
மீட்டீரே கிருபையினால்
உம்மோடு நடந்திடுவேன்
உயிர்வாழும் நாட்களெல்லாம்
4. துயரங்களின் எண்ணிக்கையை
கணக்கெடுக்கும் தகப்பன் நீர்-என்
கண்ணீரைத் தோற்பையில்
சேர்த்து வைத்துப் பதில் தருவீர்
5. மறக்கவில்லை என் பிராத்தனைகள்
செலுத்துகிறேன் நன்றி பலி
காலடிகள் இடறாமல்
காத்தீரே நன்றி ஐயா