உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு – Udalai kodu ullathai kodu

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – (2)
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார் (2)
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
1.ஒரு மணி நேரம் கொடுத்துப்பாரு
உன்னைத் தேவன் உயர்த்துவாரு (2)
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடன் இல்லாமல் நடத்துவாரு (2)
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
2.நன்றிப் பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு (2)
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு –
தீமையை நன்மையால் தினமும் வென்றிடு (2)
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
3.தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு (2)
ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் (2)
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
4.விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான் (2)
அறிக்கை செய்திடுவோம் எரிக்கோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
5.நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு

Scroll to Top