Skip to content

உம்மை நான் போற்றுகிறேன் – Ummai Naan Potrugiren

உம்மை நான் போற்றுகிறேன் இறைவா
உம்மை நான் புகழ்கின்றேன் தேவா
போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வணங்குகின்றேன்

1. என்னைக் கைதூக்கிவிட்டீர்
எதிரியின் மேல் வெற்றி தந்தீர்
உதவி தேடி வந்தேன்
உடல் சுகம் தந்தீரய்யா- ஆஆ

புகழ்ந்து பாடுவேன் ( வோம் )
மகிழ்ந்து கொண்டாடுவேன் ( வோம் )

2. மாலைநேரம் அழுகையென்றால்
காலை நேரம் ஆனந்தமே
நொடிப்பொழுது உந்தன் கோபம்
தயவோ வாழ்நாளெல்லாம்

3. சாக்கு துணி களைந்துவிட்டீர்
மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்
புலம்பலை நீக்கிவிட்டீர்
புதுப்பாடல் நாவில் வைத்தீர்

4. மலைபோல் நிற்கச் செய்தீர்
மாவேந்தன் உம் அன்பினால்
நிலைகலங்கி போனேன் ஐயா
நின்முகம் மறைந்தபோது

5. என் உள்ளம் புகழ்ந்து பாடும்
இனி மௌனமாய் இருப்பதில்லை
கர்த்தாவே என் தெய்வமே
கரம்பிடித்த மெய் தீபமே

6. புழுதி உம்மை புகழ முடியுமா?
சத்தியம் சொல்ல அதனால் இயலுமா?
என் மீது இரங்கும் ஐயா
எனக்குத் துணையாய் இரும்