Skip to content

உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – Ummai Nokki Parkirean Lyrics

உம்மை நோக்கிப் பார்க்கிறேன்
உம்மை நினைத்து துதிக்கிறேன்
இயேசையா ஸ்தோத்திரம் (4)
1. உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்
2. கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமூகமே
தினம் எனக்குத் தீபமே
3. நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் – நான்
என்னை மறக்கின்றேன்