Skip to content

உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்

Lyrics
உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்
உம் சேவைக்காய்
என்னை அர்ப்பணிக்கின்றேன்
ஏற்றுக்கொள்ளுமே
என்னை ஏற்றுக்கொள்ளுமே
பலியாக என்னை படைத்தேன்
ஏற்றுக்கொள்ளும் இயேசுவே(2)
பாகாலை முத்தம் நான் செய்வதில்லை
ஒருபோதும் அவன்முன்பாய் பணிவதில்லை(2)
இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன்
பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன்(2) – பலியாக
இருமனம் நான் என்றும் கொள்வதில்லை
இரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை(2)
ஓருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன்
என் ஆயுள் முழுவதும் நீர் மட்டுமே – பலியாக