Skip to content

உயிரினும் மேலானது – Uyirinum melanathu

உயிரினும் மேலானது
உந்தன் பேரன்பு
எனவே பாடுகிறேன்
என் உயிர் இருக்கும்வரை

1.உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதையா

போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன் – உயிரி

2. பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
ஏங்குதையா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
எப்போது வருவீரையா – போற்றி

3.நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்
உம் சமூகம் ஓடி வந்தேன் இது தானே என் விருந்து
உம் வசனம் தியானிக்கிறேன்
அது தானே என் மருந்து
மறுரூபமாகனுமே மகிமையில் மூழ்கனுமே