எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா

ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே

1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத்தாரும் ஆவியானவரே(2)
வேதவசனம் புரிந்துகொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2)

2. கவலை கண்ணீர் மறக்கணும்..
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே

3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்
வழிநடத்தும் ஆவியானவரே
உம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்
தடுத்து றிறுத்தும் ஆவியானவரே

4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் சூழ்ச்சிகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வுகள் அசதிகள் பெலவீனங்கள் நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே

https://www.youtube.com/watch?v=2TWn8ddsIJU
Scroll to Top