எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே – Enthan Ethirkalam Unthan karathilae song lyrics

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே
நீர் அனுமதியாமல் ஒன்றும் அணுகாதே (2)

ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்
உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்
துவக்கமும் முடிவும் நீர்தானய்யா
உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்

மண்ணை பரிசுத்தமாய் வனைந்து
உந்தன் துதியை சொல்ல வைத்தீர் (2)
கீழ் ஜாதி மேல் ஜாதி என்று பாராமல்
உம் ஜீவனை தந்து என் ஜீவனை மீட்டவரே (2)

என் பெயரிலே நீர் வைத்த
உந்தன் திட்டம் பெரியதல்லோ
அழியா உந்தன் இராஜ்ஜியத்தின்
திட்டம் என்னில் துவங்கினீரே

ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்
உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்
துவக்கமும் முடிவும் நீர்தானய்யா
உம்மை மட்டும் சார்ந்திருப்பேன் (2)

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே
நீர் அனுமதியாமல் ஒன்றும் அணுகாதே (2)

Scroll to Top