எனது நிழலாய் | Enathu Nilalai | Tamil Christian Song

Deal Score0
Deal Score0
எனது நிழலாய் |  Enathu Nilalai  | Tamil Christian Song

எனது நிழலாய் | Enathu Nilalai | Tamil Christian Song


எனது நிழலாய் | Enathu Nilalai | Tamil Christian Song

Thank you! for watching this video please leave a like if you enjoyed the video & Subscribe for more videos.

எனது நிழலாய் தொடரும் உறவாய் என்னை கண்டு கொண்டாய்
வாழ்வு முழுதும் விலகிடாமல் என்னிலே இணைந்தாய்
உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா – 2
நாளும் பொழுதும் என்னைத் தேடி – 2
நீயும் உடனிருந்தாய் – 2

இதயம் எழுப்பும் ஓசை கூட உனது உள்ளம் அறிந்திடும்
இமைகள் மூடும் ஒலியை கூட உனது உணர்வும் புரிந்திடும்
உந்தன் வருகை எந்தன் வாழ்வில் வளமை என்றும் தந்திடும் – 2
பாதை தெரிந்தே விலகினாலும் – 2
கரங்கள் தானே காத்திடும் – உன் கரங்கள் தானே காத்திடும்
எனது சொந்தம் நீயே ஆனால் எனது சுமைகள் மாறிடும்
எனது பலனே நீயே ஆனால் எனது பயமும் மாறிடும்
(எனது நிழலாய்……….. இணைந்தாய்)

பூவை போல மென்மையாக என்னைத் தாங்கி நின்றாய்
வாசம் நல்கும் சுவாசமாக என்னில் நீ கலந்தாய்
அன்பே உனது விருந்தில் நாளும் புதிய ஆற்றல் காண்கிறேன் – 2
அருளை தந்து வாழ்வில் இணைந்தால் – 2
புதுமையாகி போகின்றேன் – 2
எனது வரமே நீயே ஆனால் எனது கவலை மாறிடும்
எனது ஜீவன் நீயே ஆனால் எனது வாழ்வும் மாறிடும்
(எனது நிழலாய்……….. இணைந்தாய்)

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Amalin Raja
      SongsFire
      Logo