ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து | Yerugindrar thalladi lyrics | Tamil christian lyrics Good friday song
Old Tamil Christian Good Friday Song
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
களைப்போடே – என் இயேசு
குருசை சுமந்தே – என்நேசர்
கொல்கதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்…
🎶
1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்க
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான்.
🎶
2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார்.
🎶
3. இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே.
🎶
4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்தக் குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார்.
🎶
5. பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல்.
🎶
6. செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்தத் தாயின் அன்பதுவே
எருசலமே ! எருசலமே !
என்றழுதார் கண் கலங்க.
Yerugindrar – Lyrics in English.
Yerugindrar Thalaadi Thavazhandhu
Kalaipodey – En Yesu
Kurusai Sumandhey – En Naesar
Kolgadhaa Malaiyin Mel Nadandhey
Yerugindrar…
🎶
1. Kannathil Avan Oongi Adikka
Sinna Pillai Pol Yaengi Nindraar
Andha Pillathum Kaiyai Kazhuvi
Aandavarai Anupugiraan.
🎶
2. Minjum Belathaal Eeti Yeduthey
Nenjai Pillandhaan Aah! Kodumai
Rathaamum Neerum Oodi Varudhey
Ratchagarai Nokkiye Paar.
🎶
3. Indha Paadugal Undhan Vaazhvukkai
Sondhapaduthi Yetrukkondaar
Nesikindraaiyo Yesu Naadharai
Nesithu Vaa Kuruseduthey.
🎶
4. Seval Kuuvidum Moondru Velaiyum
Sondha Guruvai Marudhalithaan
Oodi Oliyum Pedhuruvaiyum
Thedi Anbai Nokkugindraar.
🎶
5. Pinney Nadandha Anbin Seezhan Pol
Pinpatri Vaa Siluvai Varai
Kaadiyai Pola Kasandhirukkum
Kashtangalai Avaridam Sol.
🎶
6. Settaigalin Keezh Serthanaithidum
Sondha Thaaiyin Anbadhuvey
Yerusalamae ! Yerusalamae !
Yendrazhudhaar Kan Kalanga.