ஐயையா நான் வந்தேன் – Iyaiya Naan Vanthen

ஐயையா நான் வந்தேன் தேவ
ஆட்டுக்குட்டி வந்தேன்

துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் தயை
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி வந்தேன்

உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்

எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்

ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்
தேவாட்டுக்குட்டி வந்தேன்

மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்.

ஐயையா நான் வந்தேன் – Iyaiya Naan Vanthen

Scroll to Top