கர்த்தாவே உம்மை – Karthave Ummai Potrugiren

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர்

1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
என் கவலைகள் பெருகும்போது
உம் கரங்கள் அணைக்குதையா

2. உந்தன் தயவால் மலைபோல் நிற்கசெய்தீர்
உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கிபோனேன்
சாக்கு ஆடை நீக்கி, என்னை
சந்தோஷத்தால் மூடினீர்

3. உம்மாலே ஒருசேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
பெலத்தால் இடைகட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்

4. உந்தன் (உம் திரு ) பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
உம்திரு நாமத்தில் வெற்றிக் கொடி ஏந்துவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே

5. உமது கோபம் ஒரு நிமிடம் தான்
உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு

Scroll to Top