கர்த்தாவே என்னோடு வாரும் – Karthavae Ennodu Vaarum

கர்த்தாவே என்னோடு வாரும்
செய்த பாவங்கள் எல்லாம் போக்கும்
என் வாழ்வை மாற்ற
என் தாழ்வை நீக்க
உலகினில் எனக்காக வந்தீர்
காலங்கள் தோறும் சாபங்கள் தீர
எனை மீட்க இரட்சகர் வந்தீர்
இரட்சித்து எனை மீட்டுக் கொண்டார்
என் காலம் யாவும் உம்மோடு வாழும்
நல்வாழ்க்கை என்றென்றும் எப்போதும் தாரும்
என் வாழ்க்கை யாவும் உமக்காக வாழும்
நல் உள்ளம் எப்போதும் என் வாழ்வில் வேண்டும்
எந்தன் மனம் என்றும் உமக்காக ஏங்கும்
உந்தன் பிறப்பாலே அது என்றும் வாழும்
உமக்காக என் ஜீவன் தாறேன் – என்றும்
உமக்காக என் ஜீவன் தாறேன்
செல்வங்கள் நூறு இருந்தாலும் கூட
உம் அன்பு இன்றி நிலையேது மண்ணில்
சொந்தங்கள் நூறு வந்தாலும் கூட
உம் சொந்தம் என்றும் மாறாது வாழ்வில்
ஜென்ம ஜென்மங்கள் உம்மோடு சே
என்றும் உம் வழிப் பாதையில் வாழ
எனக்காக வழி செய்யும் தேவா – என்றும்
எனக்காக வழி செய்யும் தேவா

Scroll to Top