
கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae Lyrics
Deal Score0

கல்வாரி சிலுவையிலே
எனக்காக தொங்கினீரே (2)
இயேசு உம் அன்பினாலே
என் பாவத்தை கழுவினீரே (2)
அன்பே அன்பே என்னையும்
நோக்கி பார்த்த அன்பே (2)
அறிந்தே நான் மீண்டும்
மீண்டும் விழுந்தேன்
தெரிந்தே நான் மீண்டும்
மீண்டும் தவறினேன் (2)
இயேசு உம் அன்பினாலே மீண்டும்
என்னை சேர்த்துக் கொண்டீரே (2)
அன்பே அன்பே என்னையும்
நோக்கி பார்த்த அன்பே (2)
வாழ்க்கையில் தடுமாறினேன்
திக்கற்றவனானேன் (2)
இயேசு உம் அன்பினாலே
என் தோழனாய் வந்தவரே (2)
அன்பே அன்பே என்னையும்
நோக்கி பார்த்த அன்பே (4)