காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu

காக்கும் தெய்வம் இயேசு இருக்க
கலக்கம் ஏன் மனமே ?
கண்ணீர் ஏன் மனமே?

1. இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர் தானே – 2

2.சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
தெரிந்து கொள்மனமே
சீடன் அவன் தானே

3. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
கூட சென்றிடலாம்
பாடி மகிழ்ந்திடலாம்

4. காண்கின்ற உலகம் நமது இல்லை
காணாத பரலோகம் தான்
நமது குடியிருப்பு

5. சீக்கிரம் நீங்கிடும் உலக பாடுகள்
மகிமையை கொண்டு வரும்
மறவாதே என் மனமே

6. மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
கிருபை விலகாதென்றார் மனது
உருகும் தெய்வம்

https://www.youtube.com/watch?v=RMcD1rr2F8c
Scroll to Top