
குற்றம் நீங்கக் கழுவினீரே – Kutram Neenga kazhuvenere
Deal Score0

குற்றம் நீங்கக் கழுவினீரே
சுற்றி வருவேன் உம்மையே
பற்றிக் கொண்டேன் உம் வசனம்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்
நீர்தானே யேகோவா ராஃபா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
1.இரக்கம் கண்முன்னே
உம் வாக்கு என் நாவில் -உம்
நான் ஏன் கலங்கணும்
நன்றி கூறுவேன்
2.மகிமை மேகத்திற்குள்
மறைந்து நான் வாழ்கின்றேன் -உம்
இரட்சகர் இயேசுதான்
எப்போதும் என் முன்னே
3.உம்மையே நம்பியுள்ளேன்
உம்மோடுதான் நடப்பேன்
தடுமாற்றம் எனக்கில்லை
தள்ளாடுவதுமில்லை
4.உமது ஜனத்தின் மேல்
பிரியும் வைக்கின்றீர்
நீடிய ஆயுளால்
திருப்தியாக்குவீர்
5.உருமாற்றம் அடைகிறேன்
உம் மேக நிழலிலே
மனம் புதிதாகின்றது
மறுரூபம் ஆகின்றேன்