சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare

சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிட தந்தருள்வார்

எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்க பலம் பாதுகாப்பும்
இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்

வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்
இயேசு நம்மோடங்கு நடக்கின்றார்-எக்காலத்தும்

ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடங்கு கவலையேன்-எக்காலத்தும்

காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனானாலும் மரணமானாலும் நம்
தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்-எக்காலத்தும்

இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து
இயேசுவை சந்தித்து ஆனந்திப்போம்-எக்காலத்தும்

Scroll to Top