ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே – Jebathal Jeyathai kaanbomae lyrics

பல்லவி
ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே
ஜெப வீரரே ஜெய வீரரே
கரத்தை உயர்த்தி கர்த்தரை நோக்கி
இரவோ பகலோ நாம் ஜெபிப்போம்
சரணங்கள்
1. எலியா செய்த ஜெபம் போல
கருத்தாய் நாமும் ஜெபித்திட்டால்
வானமும் மழையை பொழிந்திடுமே
பூமியும் பலனைத் தந்திடுமே – ஜெபத்
2. தானியேல் செய்த ஜெபம் போல
இடைவிடா நாமும் ஜெபித்திட்டால்
தூதனை அனுப்பி நமக்கு என்றும்
சேதமும் நேரிடா காத்திடுவார் – ஜெபத்
3. அன்னாள் செய்த ஜெபம் போல
இதயத்தை ஊற்றி ஜெபித்திட்டால்
கிலேசமும் விசாரமும் நீங்கிப்போம்
இதயம் கர்த்தரில் களிகூரும் – ஜெபத்
4. கொர்னேலியு செய்த ஜெபம் போல
தேவ பக்தியில் ஜெபித்திட்டால்
பரிசுத்தாவின் வரம் இங்கே
பின் மாரியாகி பொழிந்திடுமே – ஜெபத்
5. பவுலும் சீலாவும் ஜெபித்தது போல்
தேவனைத் துதித்து ஜெபித்திட்டால்
கட்டுகள் எல்லாம் கழன்றிடுமே
கட்டினவன் மீட்கப்படுவானே! – ஜெபத்
6. ஊக்கத்தோடு ஜெபித்திடுவோம்
நோக்கத்தோடு ஜெபித்திடுவோம்
விசுவாசத்தோடு ஜெபித்திடுவோம்
இயேசுவின் நாமத்தில் ஜெபித்திடுவோம் – ஜெபத்

Scroll to Top