துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal

சூரியனை சந்திரனை படைத்தவரே
வெண்மையும் சிவப்புமானவரே
ஜோதிகளின் பிதாவாக இருப்பவரே
உம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதே
மகராசாவே உம்மை போல யாரும் இல்லையே
உம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையே
உம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையே
நாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே

துதிகளின் பாத்திரரே எங்கள்
பரலோக இராஜா நீரே-2
உம்மையன்றி வேறொருவர் இல்லை
என் உள்ளத்தின் நம்பிக்கையே-2-துதிகளின்

கூக்குரலை கேட்கும் தெய்வம்
குறைகளை தீர்க்கும் தெய்வம்-2
படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களை
நடத்தும் எங்களை உந்தன் பாதையிலே-2-துதிகளின்

மாறாத தேவன் நீரே
மறவாத தேவன் நீரே-2
படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களை
நடத்தும் எங்களை உந்தன் பாதையிலே-2-துதிகளின்

சர்வ வல்ல தெய்வம் நீரே
எங்கள் துதிகளின் பாத்திரரே
சர்வ வல்ல தெய்வம் நீரே
எங்கள் பரலோக இராஜா நீரே-2
எங்கள் துதிகளின் பாத்திரரே
எங்கள் துதிகளின் பாத்திரரே

Scroll to Top