Skip to content

துதி எடுத்தால் – THUTHI EDUTHAAL

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
முறுமுறுத்தால் திரும்பி வருவான்

துதித்துப்பாடி மதிலை இடிப்போம்
மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்

டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை
கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது

துதிக்கும் தாவீதுக்கோ
கொஞ்சமும் பயமில்லை
விசுவாச வார்த்தையால்
கோலியாத்தை முறியடிச்சான்

ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
ஆராதனை வீரனுக்கு ப்ரமோஷன் (promotion) நிச்சயம்

மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
கட்டளை பிறந்தது போனான் நினிவே

வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்