தெய்வமே இயேசுவே -Deivame Yesuve

தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
1. உலகப் பெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனையா
உம்மைப் பிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனையா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
2. எதை நான் பேசவேண்டுமென்று
கற்றுத் தாருமையா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமையா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே
3. உலகம் வெறுத்து பேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திருப்பேன்
காரணமின்றி பகைக்கட்டுமே
கர்த்தரைத் துதித்திடுவேன்
சிலுவை சுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன்

Scroll to Top