நமக்காக || Namakkaga || New Tamil Christmas song #merrychristmas #christmas #tamilchristiansongs

நமக்காக || Namakkaga || New Tamil Christmas song #merrychristmas #christmas #tamilchristiansongs
நமக்காக விண்ணை விட்டு மண்ணில் பிறந்த நேச பாலனை
மனமெல்லாம் மகிழ்ந்து பாடும் துதித்துப் பாடும் இயேசு இராஜனை
ஒருவருமே காணக்கூடாத
உன்னதத்தில் இருந்தவரே
தொழுவத்திலே முன்னணையில் தாழ்மையாக பிறந்தவரே -2
தூதர்களும் போற்றிடவே
சிருஷ்டியெல்லாம் துதித்திடவே
விண்ணகத்தில் வீற்றிருந்தார்
உருவமேயற்றிருந்தார் -2
பாவத்தால் அழியும் மாந்தரை
மீட்கவே மனிதனானாரே
இரத்தத்தால் மீட்டுக்கொள்ளவே இரத்தமும் சதையுமானாரே
இயேசு பிறந்தார்
நம்மை மீட்க பிறந்தார்
இராஜன் பிறந்தார்
நம்மை ஆளப்பிறந்தார் -2
ஒருவருமே காணக்கூடாத
உன்னதத்தில் இருந்தவரே
தொழுவத்திலே முன்னணையில் தாழ்மையாக பிறந்தவரே -2
வெண்மையும் சிவப்புமவர்
சாரோனின் ரோஜா அவர்
லீலி புஷ்பமவர்
முற்றிலும் அழகுள்ளவர் -2
பாவத்தை சுமந்துக்கொள்ளவே
சரீரம் பெற்று வந்தாரே
தேவனின் சித்தம் செய்யவே
அடிமையின் ரூபமெடுத்தாரே