நல்ல சமாரியன் இயேசு -Nalla Samarian Yesu

நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தார்
1. என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே
2. அருகில் வந்தாரே
மனது உருகினாரே
3. இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
4. எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே
5. காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே
6. சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே
7. மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே

Scroll to Top