நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா
1.இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்
2.ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்
3.தூய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என்
4.அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்
5.பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

Scroll to Top