நீ ஒளியாகும் – Nee Ozhiyagum en paathaiku song lyrics

நீ ஒளியாகும் –  Nee Ozhiyagum en paathaiku song lyrics

நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்
நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும்
அரணும் நீயே கோட்டையும் நீயே
அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே

1. நீ வரும் நாளில் அமைதி வரும் – உன்
நீதியும் அருளும் சுமந்து வரும்
இரவின் இருளிலும் பயம் விலகும் – உன்
கரத்தின் வலிமையில் உயர்வு வரும்
கால்களும் இடறி வீழ்வதில்லை
தோள்களும் சுமையால் சாய்வதில்லை – என்
ஆற்றலும் வலிமையும் நீயாக – 2

2. விடியலைத் தேடிடும் விழிகளிலே – புது
விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ
பால் நினைந்தூட்டும் தாயும் நீ – என்
பாழ்வெளிப் பயணத்தின் பாதையும் நீ
அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ
அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ – என்
மீட்பரும் நேசரும் நீயாகும் – 2

https://www.youtube.com/watch?v=OTl6Av6jVeY
Scroll to Top