நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu

நெருக்கடி வேலைளில் பதிலளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்
1. நீ செலுத்தும் காணிக்கைகள்
நினைவு கூர்;ந்திடுவார்
நன்றி பலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொள்வார்
2. உன் மனம் விரும்புவதை
உனக்குத் தந்திடுவார்
உனது திட்டங்களெல்லாம்
நிறைவேற்றி முடித்திடுவார்
3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
நம் தேவன் நாமத்திலே
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
4. இரதங்களை நம்பும் மனிதர்
இடறிவிழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
நிமிர்ந்து நின்றிடுவோம்

Scroll to Top