Skip to content

பனிவிழும் இரவினிலே பெத்தலை நகரினிலே – Panivilum Iravinile Bethalai | Tamil Christmas Choir Song 2022

பனிவிழும் இரவினிலே பெத்தலை நகரினிலே – Panivilum Iravinile Bethalai | Tamil Christmas Choir Song 2022


பனி விழும் இராவினில் கடுங்குளிர் – Panivilum Iravinile Bethalai
Lyrics:

பனிவிழும் இரவினிலே பெத்தலை நகரினிலே
பாவங்கள் போக்கிடவே பரிசுத்தர் இயேசு பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
பாரில் இயேசு இன்று பிறந்தார்

ராக்காலம் மந்தை காத்த மேய்ப்பர்
ராகங்கள் வானத்திலே கேட்டார்
தாவீதின் ஊரில் மாட்டுத்தொழுவில்
பாவியின் நேசர் இயேசு பிறந்தார்
தூதர் பாடும் பாடல் கேட்க
ஆயர் உள்ளம் மகிழ்ந்தார் – பனிவிழும்

மந்தை கோலத்தில் இயேசு பாலன்
கன்னி மரியின் மடியிலே தவழ்ந்தார்
கண்ணாராக் கண்டு ஆயர் துதித்தார்
கவிபாடி பாலனைப் புகழ்ந்தார்
அதிசயித்தார் ஆனந்தித்தார்
வாழ்த்துவாரும் அறிந்தார்

என் பாவம் மீட்க இவர் பிறந்தார்
எனக்காக ஜீவன் தரப்பிறந்தார்
என் உள்ளம் இவருக்கே சொந்தம்
என் எல்லாம் இவரிலே தஞ்சம்
எதுவும் வேண்டாம் இப்பூமியிலே
இயேசு ஒருவர் போதுமே – பனிவிழும்

Trip.com WW