Skip to content

பாவ சஞ்சலத்தை நீக்க – Paava Sanjalathai | Tamil Christian Pamalai Songs | Tamil Christian Songs

பாவ சஞ்சலத்தை நீக்க – Paava Sanjalathai | Tamil Christian Pamalai Songs | Tamil Christian Songs


Paava Sanjalathai – பாவ சஞ்சலத்தை நீக்க

Paava Sanjalathai
1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்

2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார்

3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்

Trip.com WW