பூமியின் குடிகளே வாருங்கள் – Boomiyin Kudigale varungal

பூமியின் குடிகளே வாருங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்
1. மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சப்தத்தோடே
திருமுன் வாருங்கள் – அவர்
2. கர்த்தரே நம் தேவனென்று
என்றும் அறிந்திடுங்கள்
அவரே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஆடுகள் நாம்
3. துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் துதித்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்
4. நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
அவர் வசனம் தலைமுறைக்கும்
தலைமுறைக்கும் உள்ளது

Scroll to Top