
போற்றி பாடி துதிப்போம் – Poatri paadi thudhippoam – Tamil Christian Songs (FMPB)
போற்றி பாடி துதிப்போம்
இயேசு நாமம் துதிப்போம்
சர்வலோக நாதா உமக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
தேவனே வாரும் ஆவியே வாரும்
ஆர்ப்பரிக்கின்றோம் அல்லேலுயா – 2
இயேசு நமது கர்த்தரென்று எண்ணும் வேளையில்
உள்ளமே பொங்குதே பொங்கிப் பாடுதே (2)
ஆராதிக்கும் வேளை ஆர்ப்பரிக்கும் வேளை
வானமே பூமியே கர்த்தரை கொண்டாடிடு – தேவனே
கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி பாடுவோம்
மகிமையின் தேவனை போற்றி பாடுவோம் (2)
தூதர் வாழ்த்தும் தேவன் துயர் போற்றும் தேவன்
மாசில்லா இயேசுவை வாழ்த்தி என்றும் வணங்குவோம்- தேவனே
நீதி தேவன் இயேசுவை புகழ்ந்து பாடுவோம்
நியாயமே செய்வோரை கீர்த்தனம் செய்வோம் (2)
ஆனந்தமாய் பாடி தோத்திரங்கள் கூறி
இயேசுவே தேவனென்று அகிலமெல்லாம் கூறுவோம்- தேவனே