மேகமே மகிமையின் மேகமே – Megame Magimayin Megame

மேகமே மகிமையின் மேகமே – இந்த
நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

1. ஏகமாய் துதிக்கும் போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே

2. வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று (மகளென்று)
நித்தம் சொல்லணும்

3. மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே

4. வாழ்க்கைப் பயணத்திலே
முனசென்ற மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே

5. கையளவு மேகம் தான்
பெரு மழை பொழிந்தது
என் தேச எல்லையெங்கும்
பெருமழை (அருள் மழை) வேண்டுமே

https://www.youtube.com/watch?v=8JgYL1p2KwE
Scroll to Top