ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்-Haa Enna Nesam Avar Koorntha Paasam

167 : ஹா! என்ன நேசம்!

பல்லவி

ஹா! என்ன நேசம்! அவர் கூர்ந்த பாசம்!
அதில் கொண்டேன் விசுவாசம்

அனுபல்லவி

பூமான் இயேசுவின் பொற் பதி வாசம்
புரிந்திடு மெனக் கதுவே மா சந்தோஷம்

1. மாமலைச் சிகரத்தில் மகிழ்ந்து நின்று நான்
தாழ்வரை யாவுங் காண்கிறேன்!
பாலுந்தேனும் பொங்கிப் பாய்ந்திடும் நதியும்
பரதீஸில் பார்க்கிறேன் அதின் கனியும்! – ஹா

2. தேவ அருள் பெற்று செழிக்கு தின்னாடு
ஜீவ கனிகளோடு;
நீதிபரன் தங்கும் நல் மோட்ச வீடு
நீடூழி வாழலாம் ஆறுதலோடு! – ஹா

3. மரணத்தைக் கடப்பேன் மகிமை நாடடைவேன்
மகிழ்ந்தங்கு வாழ்ந்திடுவேன்
தருணத்தைக் கழியேன் தாரணி தரியேன்
பரகதி சேர்ந்து நற்பங்கை நான் பெறுவேன்! – ஹா

4. இயேசு என் தேவே! இரங்கி இப்போதே
தாசனை ஏற்றுக்கொள்ளே!
பாசமாய் என்னுள்ளப் பாவங்கள் போக்கி
பரிசுத்த னாக்கிடும் பண்புடன் தூக்கி – ஹா

Scroll to Top