Skip to content

Malaigal Vilaginaalum Tamil christian song lyrics

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலை பெயராது
மலைகள் விலகினாலும்..
கிருபை விலகாதைய்யா -4
(இயேசையா உம்)
கோபம் கொள்வதில்லை
என்று வாக்குரைத்தீர்
கடிந்து கொள்வதில்லை
என்று ஆணையிட்டீர்(என்மேல்)
பாவங்களை மன்னித்தீர்
அக்கிரமங்கள் எண்ணுவதில்லை
இயேசு எனக்காய் பலியானதனால்
நீதியினால் நான் ஸ்திரப்படுவேன்
கொடுமைக்கு நான் தூரமாவேன்
பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன்
எதுவும் என்னை அணுகுவதில்லை
எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர்
எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை
குற்றப்படும்படி செய்திடுவீர்
மனிதர்கள் விலகினாலும்
நம்பினோர் கைவிரித்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலைபெயராது
மலைகள் விலகினாலும்…