Skip to content

IDAYARGAL THANTHA KANIKAI – இடையர்கள் தந்த காணிக்கை போல

இடையர்கள் தந்த காணிக்கை போல
இருப்பதை நானும் எடுத்து வந்தேன்
கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்
கொடுப்பது நலம் என படைத்து நின்றேன்

இயேசு பாலனே ஏற்றிடுமே
நேச ராஜனே ஏற்றிடுமே

1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க
அடிமையின் தன்மையை எடுத்தவனே
உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து
மடமையில் மகிமையைக் கொடுத்தவனே

2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து
நிம்மதி தந்திட வந்தவனே
வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல
மனிதரை வானகம் சேர்ப்பவனே

https://www.youtube.com/watch?v=dqJqgDCPGss