AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

Faith Score0
Faith Score0

ஆராரோ ஆரிராரோ
கண்ணே கண்ணுறங்கு
விண்ணகம் துறந்து மண்ணகம்
மலர்ந்த மன்னவா கண்ணுறங்கு

மதத்தின் பெயரால் மனிதம் அழிந்திடும்
அவலம் மறைந்திடும் உந்தன் வரவால்
பிறப்பில் உயர்வு தாழ்வு கருதிடும்
இழிவும் ஒழிந்திடும் உந்தன் அருளால்
மனித நேயம் மண்ணில் மலர்ந்திடும்
நீதி நேர்மை புவியை நிறைத்திடும்
வா தேவா என்னில் வா
எந்தன் இதயம் பிறந்து வா

உடைமை இழந்தோர் உரிமை இழந்தோர்
உவகை கொள்வார் உந்தன் வரவால்
உறவை இழந்த உள்ளம் உடைந்தோர்
அமைதி பெறுவோர் உந்தன் அருளால்
பகைமை நீங்கிடும் உறவு மலந்திடும்
பிரிந்த இதயங்கள் மகிழ்வால் நிறைந்திடும்
வா தேவா என்னில் வா
எந்தன் இதயம் பிறந்து வா.

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo