Skip to content

பாடுவேன் என்றும் என் இயேசுவின்-Paaduven entrum en yesuvin

1.பாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்
என் ஜீவிய காலமெல்லாம் நான் உம்மைப் பாடுவேன் (2)

நான் உம்மைப் பாடாமல் வேறென்ன
செய்வேன் என் ஜீவனும் ஆனவரே
நான் உம்மைத் தேடாமல் வேறெங்கு
செல்வேன் என் வாழ்வின் நாயகனே

இயேசுவே என் உறைவிடம்
இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
தொடருவேன் அவர் அடிச்சுவடை
இனி வரும் நாளெல்லாம் (2)

2.பாவசேற்றில் நின்று என்னை தூக்கியெடுத்தவரே
சாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே (2)

நான் உம்மைப் பாடாமல் வேறென்ன
செய்வேன் என் ஜீவனும் ஆனவரே
நான் உம்மைத் தேடாமல் வேறெங்கு
செல்வேன் என் வாழ்வின் நாயகனே

இயேசுவே என் உறைவிடம்
இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
தொடருவேன் அவர் அடிச்சுவடை
இனி வரும் நாளெல்லாம் (4)