Skip to content

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya

ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே

புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே

1.கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா –புகழ்கின்றேன்

2.எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன்

3.உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்